• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து நீடிப்பு

January 9, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) 11 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி. ராமமூர்த்தி, வழக்கறிஞர்கள் ஆர். பிரதாப்குமார், வி. சுப்பையா, எஸ். முத்துராஜ், எம். சேதுராமன். ஏ.வி. பாலுச்சாமி, எம். மாடசாமி, பொறியாளர்கள் பி. கிருஷ்ண குமார், ஏ. சுப்பிரமணியன், என்.பி. புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம். ராஜாராம் ஆகிய 11 பேரும் கடந்த ஜனவரி 31–ம் தேதி நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் நியமிக்கப்பட்டதில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்று திமுக முன்னாள் எம்.பி-யும் செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன், சமூகநீதி பேரவையின் தலைவர் கே. பாலு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் 11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களையும் நியமனம் செய்த உத்தரவை கடந்த மாதம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான பெஞ்ச், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், தகுதி உள்ளவர்கள் மட்டுமே அப்பொறுப்பில் நியமிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும் படிக்க