• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகமான பொறுப்பு தான் போட்டியை உணர வைக்கும் : கோலி!

January 9, 2017 tamil.samayam.com

‘இந்திய அணிக்காக அதிகமாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் போது தான் போட்டியை சரியாக புரிந்து கொள்ள முடியும்,’ என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் முறையாக கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மூன்று விதமான கிரிக்கெட்டுக்கு கேப்டனாக பொறுப்பால் நெருக்கடி எதுவும் இல்லை என தெரிவித்துள்ள இந்திய கேப்டன் கோலி, அப்போது தான், போட்டியை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோலி கூறுகையில்,’ தோனி இதற்காகவே என்னை தயார் செய்தார். எப்போதும் ஆட்டத்தின் போக்கை எப்படி கணிப்பது என்றே சொல்லிக்கொண்டே இருப்பார். போட்டியின் போக்கோடு என்னை தயார் செய்வதிலும் தோனி கவனம் செலுத்தினார். அந்த பொறுப்பு தான் என்னை சிறந்த வீரராக செதுக்கியது. தவிர, போட்டியையும் நன்கு புரிந்து கொள்ள உதவியது,’ என்றார்.

மேலும் படிக்க