• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது – தமிழிசை செளந்திரராஜன்

November 28, 2022 தண்டோரா குழு

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேசுகையில்,

பொறியாளர்கள் என்றால் ஒவ்வொரு கருவியையை மிகவும் அழகாக வடிவமைக்க கூடியவர்கள். நம் திறமைகளை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். கோவை மாநகரை நான் வணங்குகிறேன். கொரோனா காலகட்டத்தில் பிபிடி கிட்டை தயாரித்து கொடுத்ததில் கோவையின் பங்கு முக்கியமானது.நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். நிறைய படியுங்கள் உங்களை நீங்களே புதுப்பித்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது. புதிய சிந்தனைகளை கொண்டு வரவே தேசிய புதிய கல்விக் கொள்கையை பிரதமர் கொண்டு வந்தார். Start Up களில் இந்தியா உலக அரங்கில் 3 ஆம் இடத்தில் உள்ளது. மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும். வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.

இவ்வாறு பேசினார்.

இவ்விழாவில்,227 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர். சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் வரவேற்புரை ஆற்றினார். சுகுணா அறக்கட்டளையின் செயலர்
ஸ்ரீகாந்த் கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

மேலும், இவ்விழாவில் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் சுகுணா மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க