• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்? பாடகி சின்மயி டுவீட்

November 26, 2022 தண்டோரா குழு

பின்னணி பாடகி சின்மயி கடந்த சில ஆண்டுகளுக்கு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில்,கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாலியல் தொந்தரவுக்கு, ஆளானதோடு பெற்றோர் புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பாடகி சின்மயி ட்வீட் செய்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில்,

கோவையில் உள்ள பள்ளியில் 7 – ம் வகுப்பு படிக்கும் மாணவரின் பெற்றோர் பதிந்த பதிவை ட்விட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதில் விடுதியில் தங்கிய தன் மகன் சக மாணவர்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இதை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாற்று சான்றிதழ் பெற்று வெளியேறியதோடு மகனுக்கு கவுன்சிலிங் அளித்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் அத்துமீறல்கள் நடத்தப்படுவதாகவும் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பதிவில் பள்ளியில் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க