• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சினிமாவை காதலிப்பவர் உதயநிதி – நடிகர் விஷ்ணு விஷால் கோவையில் பேட்டி

November 23, 2022 தண்டோரா குழு

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஷ்டி திரைப்படம் வரும் டிசம்பர் 2″ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாக படக்குழுவினர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர் கூறியதாவது

சுவாரசிய நிகழ்வுகள் குறித்தும் படத்தின் மையக்கருத்து குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஆணும் பெண்ணும் சமம் மற்றும் கணவன் மனைவி இடையே ego நிகழும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் எனவும் தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது என கூறினார். திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் content எதிர்பார்க்கிறார்கள்.

திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும் எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக அதிக அளவில் வளர்ந்துள்ளன.தொடர்ந்து தமிழ் படங்களுக்கு மற்ற திரை உலகினர் மத்தியில் காட்டப்படும் வரவேற்பிற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாக கருதுவதாகவும் மேலும் சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் குறித்து பேசும்போது அந்த புகைப்படங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இயக்குனர்கள் கதை எழுதும்போது நானும் அதற்கு பொருந்துவேன் என நினைக்கும் வகையிலும், fitness தொடர்பாகவும் மட்டுமே வெளியிட்டதாக கூறினார்.

மேலும் ரன்வீர் சிங் புகைப்படம் எடுத்து வெளியிடும் முன்னரே இந்த புகைப்படங்களை தன் மனைவி எடுத்து வைத்து விட்டதாகவும், உடலை கட்டுருதியாக இந்த பேணுவதை பெண்கள் சமூக வலைதளங்களில் இடும்போது பாராட்டுபவர்கள் ஆண்கள் வெளியிடும் போது அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதில்லை எனவும்தொடர்ந்து ரெஜன்ட் நிறுவனமே அனைத்து திரைப்படங்களையும் வெளியிடுகின்றனவா என எழுப்ப பட்ட கேள்விக்கு நாங்கள் கேட்பதால்தான் அவர்கள் முன்வந்து வெளியிடுகிறார்கள்.

எனது படங்களுக்கு சிக்கல் வந்த போதும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆட்சியில் இல்லாத போதும் சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை எனக்காக அவர்கள் வெளியிட்டு கொடுத்திருந்தார்கள்.
எனவே அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை எனவும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படங்களை தயாரித்து வழங்குகிறாரா அது தொடர்பாக விருப்பப்பட்ட கேள்விக்கு பணம் சமூக வலைதளங்களில் இதை போன்று படித்தேன் எனவும், அவர் அவ்வாறு தமிழ் திரையுலகில் தனது புதிய முயற்சிகளை எடுத்தால் அது வரவேற்கத்தக்கது தான் என்றார்.

மேலும் படிக்க