• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ஜ.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துரை

November 21, 2022 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநில விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் பாண்டியன் இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில துணை தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் பாண்டியன்.இவரது மகன் சதீஷ் பாண்டியனுக்கும்,மதுரையை சேர்ந்த அழகர் சாமி, நாகலட்சுமி ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஆதித்யா கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது.பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் தேசிய மகளிர் அணி தலைவியும்,கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.விழாவில்,பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பல்வேறு நிலை நிர்வாகிகள் சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன்,ஹெச்.ராஜா,பொன்ராதாகிருஷ்ணன்,கனக சபாபதி, ஏ.பி.முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர்,சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி,மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி , கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தகுமார் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க