• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை சன்னி லியோனுடன் திரைப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி -கோவையில் ஜி.பி.முத்து பேட்டி !

November 7, 2022 தண்டோரா குழு

நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது சிறப்பான அனுபவம் எனவும் அவர் தன்னை பார்த்து க்யூட் எனக் கூறிய போது சிலாகித்துப் போனேன் என டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும் பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம் எனவும் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக் பாஸை விட்டு வெளியேறியதாகவும் கூறினார்.

தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் நடிகை சன்னி லியோனுடன் திரைப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி எனவும் கூறியதுடன் தான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ கூறியவுடன் அவர் தன்னை பார்த்து கியூட் என கூறிய போது சிலாகித்து போனதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கோவையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, இதுவரை தான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை எனவும் இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன் எனவும் கூறினார்.

மேலும் படிக்க