• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் தகவல்

October 28, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி கலெக்டருக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதினார். அதனடிப்படையில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட 10 முக்கியத்‌ திட்டங்கள்‌ குறித்த பட்டியலை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் தேவைப்படும் திட்டங்கள், நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள முக்கியமான கோரிக்கைகள் மற்றும் பாலங்கள், சாலைப்பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய முக்கியமான இத்திட்டங்களை அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதிகளை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), தாமோதரன் (கிணத்துக்கடவு), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), வி.பி.கந்தசாமி (சூலூர்), கே.ஆர்.ஜெயராமன் (சிங்காநல்லூர்), அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), அமுல் கந்தசாமி (வால்பாறை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க