• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் நிறைவு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

October 20, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம்,வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன. அந்த 5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். இதனிடையே கோவை மாநகராட்சியில் சொத்துவரி பொதுச்சீராய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதில் மண்டலங்களில் உள்ள இடங்கள் மற்றும் கட்டிடங்களின் வகைகள் அடிப்படையில் ஏ,பி,சி,டி என பிரிவுகளில் சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் நடைபெற்றன. மெயின் ரோடு, பேருந்து செல்லும் சாலைகள் அதன் அருகில் உள்ள பகுதிகள் போன்றவை ஏ பிரிவிலும் அதற்கு உள்ளே உள்ள பகுதிகள் பி, சி, டி பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டன.

அதே போல் இந்த பிரிவுகளில் உள்ள வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என கட்டிடங்கள் வகைப்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் சொத்துவரி மாநகராட்சி சார்பாக விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் காரணமாக புதிய சொத்துவரி வரிவிதிப்பு கோரும் விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து விண்ணப்பங்களை வழங்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் புதிய சொத்துவரி வரிவிதிப்பு கோரும் விண்ணப்பங்கள் பெறப்படாமல் இருந்தது. சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள் தற்போது முடிவுற்றதால் இன்று (நேற்று) முதல் பொதுமக்கள் புதிய சொத்து வரிவிதிப்புக் கோரும் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அந்தந்த மண்டல அலுவலகங்களில் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 7 மாதங்களாக சொத்துவரி விண்ணப்பங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் புதியதாக கட்டிடங்கள் கட்டி முடித்தோர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க