• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் 25 மாநகராட்சி பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் மெஷின்

October 20, 2022 தண்டோரா குழு

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் சார்பில் 25 மாநகராட்சி பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் மெஷின் வழங்கப்பட்டது.

இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்கும் 25 மெஷின்களை கோவையில் செயல்பட்டு வரும் ரன்ஸ் யுவா அறக்கட்டளை கொடையாக வழங்கி வருகிறது.இந்தநிலையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் உயர்நிலை பள்ளியில், அறக்கட்டளையின் நிறுவனர் சிவநேசன் மற்றும் அதன் துணை நிறுவனர் சசிகலா சத்யமூர்த்தி இணைந்து இந்த 25 கருவிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப்விடம் வழங்கினர்.

இது குறித்து அறக்கட்டளையின் துணை நிறுவனர் சசிகலா சத்யமூர்த்தி கூறுகையில்,

மொத்தம் 30 நாப்கின்கள் ஒவ்வொரு சானிட்டரி நாப்கின் வழங்கும் மெஷினிலும் இருக்கும். இவை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் முன்னுரிமை வழங்கப்பட்டு பொருத்தப்படும், பின்னர் மாநகரட்சியின் கோ-எட் பள்ளிகளில் பொருத்தப்படும். நாப்கின்கள் தீருவதற்குள் மீண்டும் அறக்கட்டளை சார்பாகவே நிரப்பப்படும்.
அத்துடன் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்களை இயக்குவது மற்றும் உபயோகப்படுத்த பட்ட நாப்கின்களை எரிப்பது குறித்த தகவலும் விழிப்புணர்வும் பள்ளிகளில் பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும், மேலும் 25 நாப்கின் எரியூட்டும் இயந்திரங்களையும் விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க