• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரூ.46.5 லட்சம் செல்போன் டவர் உதிரிபாகங்கள் மாயம் – போலீசார் விசாரணை

October 19, 2022 தண்டோரா குழு

சென்னையை சேர்ந்த தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் செல்போன் டவர்கள் கோவையில் பல இடங்களில் அமைக்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு செல்போன் நிறுவனம் தனது செல்போன் சேவையை நிறுத்தி விட்டன. அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் உபயோகமற்ற நிலையில் இருந்த செல்போன் டவர், அதன் உதிரிபாகங்கள் பல இடங்களில் மாயமானதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி அர்ச்சுனன் (49), சரவணம்பட்டி – துடியலூர் ரோடு, சரவணம்பட்டி – சத்தி ரோட்டில் டவர் இருந்த இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது சுமார் ரூ.46.50 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் மற்றும் அதன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அர்ச்சுனன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க