• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது

October 15, 2022 தண்டோரா குழு

முன்னால் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை செட்டிபாளையம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி,இயற்கை பவுண்டேஷன், கலாம் மக்கள் அறக்கட்டளை, ஆர்.ஆர்.மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,35 ஏக்கர் நிலத்தில் சுமார் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு சமுதாய நல பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவை செட்டிபாளையம் பகுதியில் சுமார் 35 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி, இயற்கை பவுண்டேஷன்,கலாம் மக்கள் அறக்கட்டளை, ஆர்.ஆர்.மருத்துவமனை,நேரு நகர் லயன்ஸ் சங்கம், பைரா ஆகியோர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர்களாக பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி,மாவட்ட ஆளுநர் ராம்குமார், ஜி.எல்.டி. ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர்,சுற்றுச்சூழல் மாவட்ட தலைவர் சம்பத், ஆர்.ஆர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரவிந்திரன்,கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர்,லயன்ஸ் மாவட்ட பி.ஆர்.ஓ. மற்றும் வட்டார தலைவர் செந்தில் குமார் ,இயற்கை பவுண்டேஷன் நிறுவனர் வினோத் ராஜா,மற்றும் நேரு நகர் லயன்ஸ் செயலாளர்கள் லோகநாதன்,மோகன் ராஜ்,கல்லூரி பேராசிரியர் ஞானசேகரன், ராமலிங்கம் தனுஷ்
அக்னி சிறகு ராகவன் சூர்யா சூர்யா
ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இரத்தினம் கல்லூரி மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க