• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு மண்டல பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க உத்தரவு

October 14, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டுக்குட்பட்ட பி.என்.புதூர், வீராசாமி காலனியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகள், பிறப்பு இறப்பு பதிவேடு, புகார் பதிவேடுகளை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும்,வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைபடுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, பி.என்.புதூர், வீராசாமி காலனி, ராதிகா அவென்யூ ஆகிய பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

பின்னர், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலஅளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் நகரமைப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல தலைவர் தெய்வயானைதமிழ்மறை, கவுன்சிலர் சாந்தி, உதவி கமிஷனர் சேகர்,உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, சுகாதார அலுவலர் பரமசிவம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

மேலும் படிக்க