• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் 4 வது இடம், தமிழகத்தில் முதலிடம் பிடித்த காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம்

October 13, 2022 தண்டோரா குழு

லண்டனை சேர்ந்த டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தால் 12.10.2022 அன்று வெளியிடப்பட்ட உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2023 – ன் படி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 401 500-வது பிரிவில் இடம் பெற்றுள்ளது.

2022 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 104 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட உலக அளவிலான கல்வி நிறுவனங்கள் தரவுகளை சமர்ப்பித்திருந்தனர்.அதில் 1799 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.இதில் அழகப்பா பல்கலைக்கழகமானது உலக பல்கலைக்கழக தரவரிசையில் 401-500 – வது பிரிவில் இடம் பெற்றுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகம்,இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் 4- வது இடத்தையும்,தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் இத்தரவரிசைக்காக , கற்பித்தல்,ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச கண்ணோட்டம் ஆகிய நான்கு குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் உயர் கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தியுள்ளது.இதற்காக 121 மில்லியனுக்கும் அதிகமான ஆராய்ச்சி வெளியீடுகளில் 15.5 மில்லியனுக்கும் அதிகமான மேற்கோள்களை பகுப்பாய்வு செய்துள்ளது.

மேலும் உலகளவில் 40,000 அறிஞர்களின் கருத்துக்களையும் மதிப்பீடு செய்துள்ளது. இத்தரவரிசைப்பட்டியலில் கலந்து கொள்வதற்காக அழகப்பா பல்கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் குழவினர் பல்கலைக்கழகத்தின் 2022 – ம் ஆண்டுக்கான தரவுகளை சேகரித்து , சரியாகப் பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்திருந்தனர்.

அழகப்பா பல்கலைக்கழக தரவரிசைப்பிரிவின் இயக்குனர் பேரா.ஜெ.ஜெயகாந்தன் டைம்ஸ் உயர்கல்வி நிறுவன தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மேலும் இந்த உயரிய தரவரிசையில் பல்கலைக்கழகத்தை இடம்பெற செய்த பேராசிரியர்கள் , அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் பாராட்டினார்.

மேலும் படிக்க