• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா

October 13, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவின் நிகழ்வுகள் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய எஸ் மலர்விழி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் அறங்காவலர் ஆதித்யா பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே. ஜேனட் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் 2020 – 2021 வருடத்திற்க்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.பாஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்
முதுநிலை இயக்குனர் அமித் குமார் இவ்விழாவின் தலையை விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்.

தலைமை விருந்தினர் 1281 பட்ட சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார். கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய உயர் மதிப்பெண்கள் பெற்ற 30 மாணவர்கள் தலைமை விருந்தினரிடப் வாழ்த்துப் பெற்றனர். இவ்விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் சுல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படிக்க