• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

October 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டெங்கு கொசுகளை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டெங்கு பரவுதலைத் தடுக்க தினந்தோறும் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் செல்லும் இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் அனைத்து நீர்தேக்கத்தொட்டிகளிலும் அபேட் மருந்து ஊற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தெருக்கள்,வீடுகளில் மழை நீர் படும்படி வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும்.பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்க