• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு மனித சங்கிலி நிகழ்ச்சி

October 7, 2022 தண்டோரா குழு

உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று கோவை மேட்டுப்பாளையம் கால்லார் வன சாலையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தலைமையில் வன சாலைகளில் வன உயிரினங்கள் சாலை விபத்தில் இறப்பதை தடுக்கும் விதமாக *Stop Roadkill* சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்தநிகழ்வில் தமிழ்நாடு வனத்துறை , வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ( WNCT) இணைந்து குமரன் கலை கல்லூரி மாணவ மாணவிகள் உதவி வன பாதுகாவலர் செந்தில் குமார், வனச்சரகர்கள் ஜேசப், செந்தில் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கூறுகையில்,

ஒவ்வாறு வருடமும் அக்டோபர் 2ம் தீதி முதல் 8ம் தேதி வரை உலகம் முழுவதும் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது மேட்டுப்பாளையம் – குன்னூர், ஊட்டி – சாலையின், இருபுறமும் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ஏராளமான குரங்குகள் உள்ளன. இவை, சாலையோரங்களில் உள்ள கல்வெட்டு, திட்டுகளில் அமர்ந்து கொள்வதும், அவ்வழியாக வாகனங்களில், வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவு பண்டங்களை ருசி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

உணவை எதிர்பார்த்து சாலைக்கு வரும் குரங்குகள், வாகனங்களில் அடிபட்டு காயமடைகின்றன; சில வேளைகளில் பலியாகின்றன. அதனால், வாகனங்களில் அடிப்பட்டு குரங்குகள் பலியாவதை தவிர்க்க, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலையில் உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். சாலையில் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சிராஜ்தீன் கூறுகையில் ,

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன. குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையில் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடுகின்றன.

இதனை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது ஆனால் பொது பொதுமக்களும் தொடர்ந்து வன விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர். வனங்களின் ஆரோக்கியத்திற்க்கு வன உயிரினங்களின் பங்கு மிக முக்கியமானது ,ஆகையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலையில் உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். சாலையில் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் என கூறினார்.

மேலும் படிக்க