• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு !

October 5, 2022 தண்டோரா குழு

உக்கடம் பஸ் நிலையம் அருகே பழைய டாஸ்மார்க் கடை மீண்டும் திறப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் தமுமுக, மமக, மஜக உள்ளிட்ட அனைத்து ஜமாத்துகள் அரசியல் கட்சி தலைவர்கள் சம்பவ இடத்திற்கு நேரடி பார்வையிட்டு கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மமக மாவட்ட தலைவர் சர்புதீன்,

இந்த பகுதியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். டாஸ்மாக் திறக்கப்பட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகுவார்கள்.மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.கடை திறக்கப்படாது என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள்.மேலும் கடை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் தமுமுக உள்ளிட்ட அனைத்து ஜமாத் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜனநாயக ரீதியில் நடைபெறும் என்றார்.

இதில் மமக மாவட்ட தலைவர் சரப்புதின், 86 வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான்,மஜக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக மமக மாவட்ட துணை செயலாளர்கள் நூர்தின், சாகுல், ஆஷிக் அஹ்மத், உள்ளிட்ட ஏராளமான ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க