• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவனுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்து பி.எஸ்.ஜி மருத்துவமனை சாதனை

October 3, 2022 தண்டோரா குழு

ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு பிறவியிலேயே இருதயத்தில் குறைபாடு இருந்ததால் சிரமப்பட்டு வந்தான். இதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்பட்டு உடல் எடை கூடாமல் இருந்தது.

சிறுவனுக்கு (ஏட்ரியல் செப்டல் குறைபாடு) நோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. எனவே பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அனந்தநாராயணன், சிறுவனுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தார்.

தற்போது சிறுவன் குணம் அடைந்து நலமாக வீட்டிற்கு சென்று விட்டான்.பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சாய் சிட்டி இடையே உள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறுவனுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களில் வசித்து வரும், இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க