• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு கத்தியால் குத்திய கணவர் !

October 3, 2022 தண்டோரா குழு

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த நான்சி என்ற பெண் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக நான்சி நடத்தையில் கணவர் வினோத்க்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த நான்சி, பிற்பகலில் உணவுக்குப் பிறகு பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த கணவர் வினோத்துக்கும், நான்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து நான்சியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் நான்சி துடிதுடித்தார். அருகில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவரை மீட்டு அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இருவருக்கும் மேற்பட்ட தகராறு கணவர் வினோத் படுகாயம் அடைந்தார். அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க