• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வட்டாட்சியர் கையெகபடுத்த முயற்சி

October 1, 2022 தண்டோரா குழு

கோவையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வட்டாட்சியர் கையெகபடுத்த முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த மயிலேறியம்பளையத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் உள்ளது.இதனை சுற்றி கோவிலுக்கு சொந்தமான பட்டாவுடன் கூடிய இடமும் உள்ளது.இந்த கோவிலை அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்களது காவல் தெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு திடீரென வந்த வட்டாட்சியர் கோவிலை மட்டும் விட்டுவிட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தை கையேகபடுத்த முற்பட்டு நோட்டிஸ் கொடுத்து விட்டு சென்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலின் முன்பு திரண்டனர்.இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி தலைவர், கவுன்சிலர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் காந்திஜெயந்தி அன்று நடைபெற இருக்க கூடிய கிராமசபை கூட்டத்தில் கோவில் நிலம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன் பின் பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். பழைமையான கோவிலுக்கு சொந்தமான இடங்களை பல நூறு ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென கையேகபடுத்த முற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க