• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் தல அஜித் 57 அறிமுக போஸ்டர்!!

January 5, 2017 tamil.samayam.com

தனது 57வது படத்தின் போஸ்டரை நடிகர் அஜீத் பொங்கலன்று ரசிகர்களுக்கு வெளியிடுகிறார்.

நடிகர் அஜீத் தற்போது தனது 57வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 2015ல் அஜீத் நடித்த ‘வேதாளம்’ படம் வெளியானது. அதையடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மாதக்கணக்கில் ஓய்வில் இருந்ததால் கடந்த ஆண்டு அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது அஜீத் தனது 57வது படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பல்கேரியா நாட்டில் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற்று வந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக கடந்த மாதம் அங்கிருந்து இந்தியா திரும்பினர். இந்நிலையில், ஜனவரி 18-ம்தேதி முதல் மீண்டும் பல்கேரியாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும், அஜீத்தின் 57வது படம் சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் மட்டுமே இதுவரை வெளியான நிலையில், பொங்கல் அன்று அப்படத்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தளிக்க அஜீத் முடிவு செய்திருக்கிறார்.

மேலும் படிக்க