• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் PFI அமைப்பினர் குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்டு கைது

September 22, 2022 தண்டோரா குழு

நாடு முழுவதும் PFI நிர்வாகிகளின்
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் அந்த அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது.

பின்னர் அவரை NIA அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதே போல கர்நாடக மாநில PFI செயலாளர் சாதிக் முகமது தனது உதவியாளருடன் இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் வைத்து சாதிக் முகமதுவையும் அவரது உதவியாளரையும் பிடித்த NIA அதிகாரிகள் ரயில் நிலையம் முன்பாக உள்ள காவலர் அருங்காட்சியகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இஸ்மாயில் மற்றும் சாதிக் முகமது ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு நான்கு NIA அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சாதிக் முகமதுவுடன் வந்த உதவியாளர் கோவை விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டார். டெல்லியில் வைத்து விசாரணைக்கு பின்னர் இருவரும் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதான தகவல்கள் கூறப்படும் என NIA தகவல் வட்டாரம் தெரிவிக்கின்றது

இந்நிலையில் PFI நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை நகரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.ஒப்பணக்கார வீதி, ஆத்துப்பாலம் , சாய்பாபா காலனி உட்பட பல்வேறு இடங்களில் PFI, SDBI அமைப்பினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க