• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சி ஈடுப்பட்ட நபரால் பரபரப்பு

September 12, 2022 தண்டோரா குழு

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் ஒரு வாரத்திற்கு முன் கனரா பேங்க் ஏடிஎம் (இவரது பேங்க் இந்தியன் பேங்க்) ல் 2500 ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராமல் இவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துவிட்டது.

இதனையடுத்து வடவள்ளி பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று மேலாளரிடம் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்காமல் அழைக்கழித்ததாக கூறப்படுகிறது. பல முறை கேட்டும் எவ்வித விளக்கம் அளிக்கபடாமல் வங்கி கணக்கிற்கு பணம் மீண்டும் வராமல் இருந்ததால் மன உளைச்சலான இவர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இது குறித்து மனு அளிக்க வந்தார்.

அப்போது திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்த காவலர்கள் உடனடியாக அவரிடம் இருந்து மண்ணெனையை பிடுங்கி விசாரித்து விட்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும் படிக்க