• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

13 மணி நேரம் இரு கைகளில் சிலம்பம் சுற்றி கோவை மாணவன் சாதனை !

September 5, 2022 தண்டோரா குழு

கோவை ஆண்ட்லீ ப்ளேக் பெல்ட் அகாடமி சார்பாக நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில், தொடர்ந்து 13 மணி நேரம் இரு கைகளில் சிலம்பம் சுற்றி கோவை அப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் பவன் சாதனை.

கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த .நவீன் குமார்,உமாதேவி தம்பதியரின் மகன் பவன்.பத்து வயதான இவர் ,அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.குங்பூ,கிக் பாக்சிங்,மற்றும் தமிழக பாரம்பரிய கலையான சிலம்பம் உள்ளிட்ட கலைகளை ஆண்ட்லீ ப்ளாக் பெல்ட் கராத்தே அகாடமியில்,பயின்று வரும் சிறுவன் பவன் ஏற்கனவே குங்பூ,கிக் பாக்சிங் விளையாட்டில் ஏற்கனவே மாநில,மாவட்ட அளவில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது புதிய உலக சாதனையாக தொடர்ந்து 13 மணி நேரம் இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றி இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.ஆண்ட்லீ ப்ளாக் பெல்ட் கராத்தே அகாடமி சார்பாக, சிறுவனின் உலக சாதனை நிகழ்வு துடியலூர் பகுதியில் உள்ள இ வால்வு ப்ளஸ் கிராண்ட் ஃபேமிலி ஃபிட்னஸ் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்றது.

இதில் சிறுவன் பவன் காலை ஐந்து மணி முதல் சிலம்பத்தை லாவகமாக தனது இரண்டு கைகளால் தொடர்ந்து 13 மணி நேரம் சுற்றியபடி சாதனையை நிறைவு செய்தார்.இந்த உலக சாதனை இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.சாதனை சிறுவனுக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ், மற்றும் ஆண்ட்லீ ப்ளாக் பெல்ட் அகாடமியின் நிறுவனரும் பவனின் பயிற்சியாளருமான ஆனந்த குமார், ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் கலந்து கொண்டு சிறுவன் பவனுக்கு சாதனை சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.தொடர்ந்து, பவனின் நண்பர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாதனை சிறுவன் பவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க