• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சர்ச்சை…! நாளேட்டை எரித்த உதயநிதி மன்றத்தினர்…!

August 25, 2022 தண்டோரா குழு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டதாக அந்த நாளேட்டை எரித்து கோவையில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவருடன் முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் உள்ள புகைப்படத்துடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.அதில் சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை, அழுத்தத்தில் ஆசிரியர்கள், அந்தரத்தில் பயிற்சி மையம்,அமைச்சர் பெயில்,என பல்வேறு தலைப்புகளில் அமைச்சர் குறித்து அவதூறு செய்திகளை வெளியீட்டுள்ளதாக கோவை மாவட்ட மாநகர தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளேட்டினை எரித்து இதற்கு எதிராக கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.மேலும் இந்த நாளேடுகள் கடைகளில் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர் பாபு,மாவட்ட பொறுப்பாளர் ராகுல்ராம்,செல்வம், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க