• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டி

August 20, 2022 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கோவையில் மாநில அளவிலான தமிழ்நாடு ஓப்பன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.அலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற உள்ள இதன் துவக்க விழாவில் பி.எஸ்.ஜி. குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

விழாவில் கல்லூரி முதல்வர் பிரகாசன், பாலிடெக்னிக் முதல்வர் கிரிராஜ்,மற்றும் துறை தலைவர்கள் செந்தில் குமார், அரசு, கிருஷ்ணம்மாள் கல்வி குழுமங்கள் நிர்வாக அறங்காவலர் கோபி குமார் மற்றும் கராத்தே சங்க நிர்வாகிகள் நீல் மோசஸ்,வெங்கட்,பால் விக்ரமன், வீரமணி, சினுத்,பாலசுப்ரமணியம், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில்,தமிழகத்தின் மதுரை,கோவை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஜூனியர்,சப் ஜீனியர்,சீனியர் என பல்வேறு பிரிவுகளில் கட்டா,குமித்தே பிரிவுகளில் கராத்தே போட்டி நடைபெற்றது.

இதில் தேர்வு செய்யப்பட உள்ள வீரர்,வீராங்கனைகள் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

மேலும் படிக்க