• Download mobile app
02 Apr 2026, ThursdayEdition - 3704
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

252 கியூப்களில் தேசிய கொடி வரைந்து 8 வயது குழந்தை அசத்தல்

August 14, 2022 தண்டோரா குழு

75வது சுதந்திரத்தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை துடியலூர் அருகே 252 கியூப்களில்தேசிய கொடி வரைந்து 8 வயது குழந்தை அசத்தியுள்ளார்.

கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 8). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.75வது சுதந்திரத்தின கொண்டாடப்படுவதை அடுத்து ஹன்சிதா தேசிய கொடியை கியூப்களில் வரைந்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி ஹன்சிதா கூறுகையில்,

சிறு வயதில் இருந்தே கியூப் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதை வைத்து கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் உருவம் வரைந்தேன். அதே போல் கியூப்களில் நிறைய வரைந்துள்ளேன். தேசிய கொடி வரைய வேண்டும் என ஆர்வம் இருந்தது. 252 கியூப்களில் வரைந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

இவரது திறமையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் படிக்க