• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக யானைகள் தினத்தையொட்டி கோவையில் விழிப்புணர்வு பேரணி

August 12, 2022 தண்டோரா குழு

உலக யானைகள் தினத்தையொட்டி கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை வனகோட்டம் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி, மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தலைமையில் யானைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாவட்ட வன அலுவலர் வளாகத்தில்
பேரணி தொடங்கிய நடைபெற்றது.

தமிழ்நாடு வனத்துறையினருடன் இணைந்து வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை WNCT & Wgwct நடைபெற்ற பேரணியில் கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் SNS டாக்டர் ராஜலட்சுமி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உதவி வன பாதுகாவலர் செந்தில் குமார், வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் அலி ஒருங்கிணைப்பாளர் சிராஜ் தீன், ஜெனோ வில்சன்,மோகன் வனச்சரக அலுவலர்கள் அருண், செல்வராஜ் ,செந்தில்,சந்தியா மற்றும் வன ஊழியர்கள் வன வேட்டை தடுப்பு கவாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் யானை முகம் வேஷமிட்டு பேரணியில் பங்கேற்றனர்.பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்வில் கோவை வனகோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வன ஊழியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது

மேலும் படிக்க