• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி

August 11, 2022 தண்டோரா குழு

கோவை வடவள்ளி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை தடாகம் சாலையில் இடையர்பாளையத்தில் இருந்து வடவள்ளி செல்லும் சாலையில் இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைப்பதற்காக சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஏற்கனவே இந்த சாலை கடுமையாக சேதம் அடைந்திருந்த நிலையில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த நீர் அங்குள்ள குழிகளில் நிரம்பி இருப்பதால் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும் பிற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கவும், சாலையை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க