• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது

August 7, 2022 தண்டோரா குழு

கோவை வடக்கு மாவட்டம்நம்பர்-4 வீரபாண்டி பேரூராட்சி திமுகவின் சார்பாக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு லோட்டஸ் கண் மருத்துவமனை, விக்ரம் இ.என்.டி. மருத்துவமனை, ஸ்ரீ லட்சுமி மருத்துவமனை போன்றவைகள் இணைந்து இலவச கண் பரிசோதனை, காது , இருதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் No:4 வீரபாண்டி பேரூராட்சியின் நாயக்கனூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இம்முகாமை கூடலூர் நகர கழக செயலாளர் நகராட்சி தலைவர்அ.அறிவரசு, பேரூராட்சி தலைவர் பத்மாவதி, துணைத் தலைவர் இனியராஜ், கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தோனிராஜ், பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ், அவைத்தலைவர் ஆனந்தராஜ் , துணைச் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி, பேரூராட்சி உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய பிரதிநிதி சேரன்நாடு கார்த்திகேயன் , பேரூராட்சி உறுப்பினர் சங்கீதா, டாஸ்மார்க் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க