• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

July 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை தியாகி குமரன் வீதியில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயினை புதுப்பித்து விரைவாக குடிநீர் விநியோகம் செய்திட சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் முறையாக உள்ளதா? என கேட்டறிந்தார்.

பின்னர் குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கும்போது அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிட வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து பெரியகடை வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சுற்றுசுவர் பணியை பார்வையிட்டு விரைவாக பணியை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் சலிவன் வீதி பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட சுகாதார ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.பின்னர் ராஜ வீதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறர்களா என ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் மஞ்சப்பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து வீ.வி.எம்.நகரில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு மகப்பேறு தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள், செல்வம்பதி, முத்தண்ணன் குளம் ஏரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் குளத்தின் புனரமைப்புப்பணிகள், வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் ஆகிய பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் இப்பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின்போது மத்திய மண்டல உதவி கமிஷனர் சங்கர், செயற்பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க