• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மொபைல் ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.101க்கு 4ஜி ஸ்மார்ட் போன் அதிரடி ஆஃபர்

July 16, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் ஒன்பதாவது வீதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள நியூ பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் ஷோரூமில் மூன்றாயிரம் ரூபாய்க்கு மேல் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 101 ரூபாய்க்கு 4 ஜி ஸ்மார்ட் போன் அல்லது நோக்கியா 2.5 கீபேட் மொபைல் மற்றும் பிட்னஸ் பேஃண்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள 7″இன்ச் லாவா ஃபேப் ரூபாய் 2,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

இது குறித்து பிக்சல் கம்யூனிகேஷன் மொபைல் ஷோரூம் உரிமையாளர்கள் கூறுகையில்,

கோவையில் எங்களது நான்காவது கிளையை கோவை கிராஸ்கட் சாலையில் துவக்கி உள்ளோம். புதிதாக தொடங்கப்பட்ட செல்போன் கடையில் உபயோகப்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடையின் திறப்பு விழா சலுகையாக 3 ஆயிரம் ரூபாய்க்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு செல்போனை வாங்குபவர்கள் 101 ரூபாய் செலுத்தி 4ஜி ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம்.

எங்களது கிளையில் அனைத்து வகை பிராண்டட் மொபைல் போன்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 3 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை வரையில் அனைத்து பிராண்டட் மொபைல் போன்கள் வாரண்டியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சலுகை மூன்று நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றார்.

இச்சலுகை கோவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் 101 ரூபாய் ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் கடை முன்பு அலைமோதியது. கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் இந்த கடையில் ஸ்மார்ட் ஃபோனை வாங்கி சென்றனர்.

மேலும் படிக்க