• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களைக் மீண்டும் இணைப்பது குறித்து பொதுசெயலாளர் முடிவு எடுப்பார்

July 15, 2022 தண்டோரா குழு

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களைக் மீண்டும் இணைப்பது குறித்து பொதுசெயலாளர் முடிவு எடுப்பார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்ட பின், கோவைக்கு வருகை தந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஜெயலலிதா ஆசியுடனும் ,பொதுகுழு உறுப்பினர்களின் ஆதரவுடனும் ,மக்கள் எதிர்பார்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.என்றும் 30 ஆண்டுகளாக மக்களுக்கு நல்லது செய்த அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.அதற்கு ஏற்றார் போல் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களைக் மீண்டும் இணைப்பது குறித்து இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு எடுப்பார் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க