• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கற்பகம் பல்கலை கழகத்தில் ஒருநாள் ஐஏஎஸ் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி

July 14, 2022 தண்டோரா குழு

கற்பகம் பல்கலை கழகத்தின் வழிகாட்டுதல் மற்றும் போட்டித் தேர்வுக்கான மையமும் தீரன் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ஒரு நாள் ஐஏஎஸ் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி பல்கலைக்கழகத்தில் சேரமான் பெருமான் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தீரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் ஆர்.சக்தி பார்த்திபன் தலைமை வகித்தார். அவர் இந்தியா ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுழைவாயில் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் ஐஏஎஸ் தேர்வுத் திட்டம், தேர்வுக்கான பாடத் தேர்வு, தயாரிக்கும் முறை மற்றும் ஐஏஎஸ் தேர்வு தொடர்பான பல்வேறு வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 156 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இவ்விழாவை வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.ஜோதி வரவேற்புரை வழங்கினார். பல்கலை கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பி.வெம்கடாசலபதி விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியை பொறியியல் துரையின் முதன்மையர் முனைவர் ஏ.அமுதா அவர்கள் வாழ்த்திப் பேசினார். தீரன் ஐஏஎஸ் அகாடமி ஆசிரியர் கிரிதாரி நாகராஜன் அவர்கள் அமர்வை வழிநடத்தினார்.ஒருங்கிணைப்பாளர் முனைவர். இ.சிவசெந்தில் நன்றி கூறினார்.

மேலும் படிக்க