• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்கள் வெள்ளையாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும் ஒன்றும் இல்லை – நடிகை சம்யுக்தா

July 11, 2022 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பெண்களுக்கு மேக்கப் பயிற்சி கொடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நடிகை சம்யுக்தா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

மேக்கப் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று இந்த மேக்கப் துறையால் பல பேர் நன்மை அடைந்து வருகின்றனர் ஒரு சில பெண்கள பகுதி நேரமாக மேக்கப் தொழிலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். பொதுவாக பெண்கள் வீட்டை பார்த்துக் கொள்வது வேலைக்கு செல்வது என்பது போன்ற பணி இருந்தாலும் மேக்கப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருகிறார்கள் தற்போது மேக்கப் துறைக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

அதேபோல சிறிய பங்க்ஷன் ஆனாலும் பெரிய நிகழ்ச்சி என்றாலும் அனைத்திற்கும் தற்போது மேக்கப் ஆர்டிஸ்ட்களை நாடுகின்றனர் மேலும். சினிமா துறையில் மேக் அப் ஆர்டிஸ்ட் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது மேலும் கருப்பாக இருக்கும் பெண்கள் மேக்கப் போட்டால் நன்றாக இருக்காது என்பது தவறான புரிதல் கருப்பாக இருந்தாலும் நாம் அழகாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். கருப்பும் வெள்ளையும் ஒன்றும் தான் குறிப்பாக நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் நன்றாக இருந்தது என தெரிவித்தார்.

மேலும் படிக்க