• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

July 5, 2022 தண்டோரா குழு

உலக நாடுகளில் குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸ் நோய்க்கு யாரும் பாதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்க, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்திலும், குரங்கு அம்மை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவையில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை, சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென, தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதே போல் கோவையில் கொரோனா தொற்று தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களின் விவரமும் தெரிவிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதே சமயம் குரங்கு அம்மை நோய் தொற்று பரவலை கண்காணிக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அரசுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் விமான நிலையத்தில் சுகாதார குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காய்ச்சல், உடலில் தடிப்பு உள்ளிட்ட குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை குரங்கு அம்மை அறிகுறிகளுடன் யாரும் சிகிச்சை பெறவில்லை. அதே போல் கொரோனா தொற்று தொடர்பாக அறிகுறிகளுடன் வருபவர்கள் குறித்தும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க