• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விஷ்வ ஹிந்து பரிசத் ஆர்பாட்டம்

July 1, 2022 தண்டோரா குழு

ராஜஸ்தானில் தையல் தைக்கும் தொழிலாளி கண்ஹயா லால் படுகொலையை கண்டித்து கோவையில் விஷ்வ ஹிந்து பரிசத் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் முஸ்லீம் மதம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தார். அவருடைய கருத்திற்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த தையல் தொழிலாளி கண்ஹையா லால் சமுக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது கடைக்கு சென்ற நபர்கள் அவருடன் தொழில் ரீதியாக சந்திப்பது போல் நாடகமாடி அவரை கொலை செய்ததுடன் அல்லாமல் அவற்றை வீடியோ எடுத்தி சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் இந்துக்கள், மற்றும் இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஷ்வ ஹிந்து பரிசத் மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இசுலாமியர்களுக்கு எதிராகவும், கண்ஹையா லாலை கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினார். மேலும் இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கும் செயற்பாட்டாளர்களை பழிவாங்க நினைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்து அமைப்புகள் ஒன்றாக இனணந்து எதிர்க்க வேண்டும் கேட்டுகொண்டனர்.

இதில் விஷ்வ ஹிந்து பரிசத் மாநில செயலாளர் லக்ஷ்மணன், பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்ட செயல்தலைவர் சிவலிங்கம், செய்தி தொடர்பாளர் ரமேஷ், பாஜக, இந்துமுன்னனி, மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க