• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரத்யேக மேக்கப் கலை பயிற்சி ஸ்டுடிய – தொழில் முனைவோராக ஆர்வம் காட்டும் பெண்கள்

June 28, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த வைஷ்ணவி வைஷூஸ் (Vaishu’s) Bridal Studio & Academy வாயிலாக மணப்பெண்களுக்கான பிரத்யேக மேக்கப் குறித்த பயிற்சியை 20 நாட்களில் வழங்கி,பெண்களை தொழில் முனைவோராக மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கோவையை சேர்ந்தவர் வைஷ்ணவி. பெண்களுக்கான மேக்கப் கலையில் ஐந்து வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், மேக்கப் மற்றும் சிகை அலங்கார துறையில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் நன்கு அறிமுகமானவர்.

இந்நிலையில் மேக்கப் துறையில் சிறந்த தொழில் முனைவோராக பெண்களாலும் சாதிக்க முடியும் எனும் வகையில், தடாகம் சாலையில்,அரசு தொழில் நுட்ப கல்லூரி எதிரில், Vaishu’s Bridal Studio & Academy எனும் மையத்தை துவக்கியுள்ளார். பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேக்கப் ஸ்டுடியோ வாயிலாக இருபது நாட்களில் மேக்கப் கலை குறித்த பயிற்சி அளித்து,மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழை வழங்குகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சிறு வயது பெண்கள் முதல் வயது வித்தியாசமின்றி பெண்கள் மேக்கப் துறையில் ஆர்வம் காட்டுவதாகவும், சாதாரண மேக்கப் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மணமகளுக்கு மேக்கப் செய்வதற்கான பயிற்சியை 20 நாட்களில் வழங்கி சிறந்த மேக்கப் கலைஞர்களாக உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.

மேக்கப் துறையில் தற்போது வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அதிக பெண்கள் இதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். தகவல்களுக்கு 9677691591 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேக்கப் கலை பயிற்சி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க