• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு

June 26, 2022 தண்டோரா குழு

கோவை காளியாபுரம் சின்னைய கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்(17) மற்றும் காகா.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார்(17) ஆகிய இருவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள c.s.i. மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுடன் சேர்ந்து நண்பர்கள் 3 பேரும் காளியாபுரம் பகுதியில் உள்ள கல்லு குழியில குளிக்க சென்றுள்ளனர்.அப்போது தண்ணீரில் இருவர் மட்டும் சிக்கிக்கொண்டுள்ளனர். உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சஞ்சய் மற்றும் சஞ்சய் குமார் தண்ணீரில் தேடி வந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

நீண்ட நேரம் தேடுதலுக்கு பின் சடலமாக கிடைக்கப்பட்ட இருவரின் உடலும் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் மாணவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க