• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு மேயர் வாழ்த்து

June 24, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.இதில் படித்த 553 மாணவர்களும்,1,081 மாணவிகள் என மொத்தம் 1,634 பேர் 12ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 470 மாணவர்களும், 1,036 மாணவிகள் என மொத்தம் 1,506 பேரும் தேர்ச்சி பெற்றனர். இது 92.17 சதவீதமாகும்.

அதே போல் கோவை மாநகராட்சியின் கீழ் 28 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 731 மாணவர்களும், 1,101 மாணவிகளும் என மொத்தம் 1,832 பேர் எழுதினர். இதில் 568 மாணவர்கள், 1,040 மாணவிகள் என 1,608 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.77 தேர்ச்சி சதவீதமாகும்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 4 பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணைமேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா, கல்விக்குழு தலைவர் மாலதி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க