• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அந்தோணியார் ஆலய ஆடம்பர 15தேர்களின் பவனி விழா ! மத வேறுபாடுகளின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

June 20, 2022 தண்டோரா குழு

கோவையில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனி விழாவில் 15தேர்கள் வண்ண விளக்குகளுடன் திருவீதி உலா வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடமாக கொரோனா ஊரடங்கால் தேர் திருவிழா நடைபெறவில்லை.இந்த நிலையில் இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றி தேர் திருவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நாட்கள் தொடங்கியது. தொடர்ந்து இன்றோடு ஏழு நாட்களும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து ஆடம்பர தேர் திருவிழா பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனியில் அந்தோணியார் தேர்,சூசையப்பர் தேர், சகாய மாதா தேர், பனிமய மாதா தேர், அன்னை தெரசா தேர்,
மிக்கேல் அதிதூதர் தேர்,இருதய ஆண்டவர் தேர்,பூண்டி மாதா தேர்,செபமாலை மாதா தேர்,
பெரியநாயகி மாதா தேர், வேளாங்கண்ணி மாதா தேர்,குழந்தை இயேசு தேர்,செபஸ்தியார் தேர், புனித தெரசா தேர்,காணிக்கை மாதா தேர் என 15 தேர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த பவனி ஆனது புனித அந்தோணியார் தேவாலய நுழைவாயிலில் இருந்து தொடங்கி ரெட் ஃபீல்ட்ஸ் ரோடு வழியாக வந்து, ராமநாதபுரம் காவல் நிலையம் பின்புறம் சென்று மீண்டும் அந்தோணியார் கோயிலை அடைந்தது. இந்த பவானியில் மத வேறுபாடுகளின்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க