• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘போலீஸ்கிட்ட சொல்லுவியா அப்ப இந்த வாங்கிக்கோ கத்திக்குத்து’

June 17, 2022 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் அருகே சொக்கம்புதூரில் வசித்து வருபவர் அகிலபிரியன் (29). பெயிண்டர்.இவர் அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அகிலபிரியன் வீட்டிற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த போது பிரவீன் குமார் என்கிற தென்னாலி என்பவர் குடிபோதையில் அகிலபிரியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து அகிலபிரியன் காவல் நிலையம் சென்று புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே அகிலபிரியனின் நண்பர் வினோத் என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் பிரவின்குமார் என்கிற தென்னாலி காவல்நிலையம் சென்று என் மீது புகார் அளிப்பாயா? எனக்கூறி தான் வைத்திருந்த கத்தி மூலம் அகிலபிரியன் மற்றும் வினோத் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அருகில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக செல்வபுரம் போலீசார் அகிலபிரியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க