• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்த மழலைகள் உற்சாகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்

June 13, 2022 தண்டோரா குழு

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஆரம்பித்த பள்ளிகளில் ஒரு வாரத்துக்கு ஓவியம், உளவியல் மேம்பாடு உள்ளிட்ட புத்துணர்வு வகுப்புகள்

அடைபட்ட பறவை கூண்டிலிருந்து உற்சாகமாக பறப்பது போல வீட்டிலிருந்து சிறார்கள் மழலைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வர ஆரம்பித்திருக்கின்றனர். கோவிட், கோடை விடுமுறை உள்ளிட்டவற்றால் மூடப்பட்ட பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலானவர்களுக்கு இன்று முதல் திறக்கப்பட்டிருக்கின்றன. கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 193 மற்றும் தனியார் பள்ளிகள் 465 என மொத்தம் 658 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. தவிர, 1,200க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இந்த நிலையில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த மாதம் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்தன. மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் ஆரம்பமாகின.இதனை தொடர்ந்து வரும் 20-ம் தேதி பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 27-ம் தேதி முதல் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்குகிறது. அனைத்து அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறந்ததும் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம், உளவியல் ரீதியான வகுப்புகள் மட்டும் நடத்தப்பட உள்ளன. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்கள் மாணவர்களுக்கு நடத்தப்படும். பள்ளிகளில் கடந்த வாரமே தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறார்களும்,ஆசிரியர்களும் ஆன்லைனில் வகுப்பை நடத்தி வந்த நிலையில் நட்பு வட்டாரத்தையும் பாடம் சொல்லிதரும் ஆசிரியர்களையும் காண பள்ளி மழலைகள் சிறார்கள் ஆர்வம் காட்டியாதனால் வழக்கமான கல்வி ஆண்டினை விட கூடுதலான மகிழ்ச்சியை நம்மால் காண முடிந்தது.

வகுப்புக்கு முன் பிரேயரில் மாணாக்கர்களுக்கு அறிவுறையும் வரவேற்ப்பு பரதநாட்டியமும் அறங்கேறி பள்ளி சிறார்களை மழலைகளை உற்ச்சாகபடுத்தியது.

மேலும் படிக்க