• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ. 2.5 கோடி மதிப்பிலான குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை மேயர் துவக்கி வைத்தார்

June 10, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 65வது வார்டில் உள்ள சிவராம் நகரில் ரூ. 2.5 கோடி மதிப்பில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட உள்ளது. இந்தக் குடிநீர் மேல்நிலை தொட்டியின் கட்டுமானப் பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 32 மற்றும் 37ம் வார்டுக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் சாலை விளாங்குறிச்சி பாலம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5 கோடியே 28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணியினை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று தார் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:

24*7 குடிநீர் திட்டம் மற்றும் இந்தியன் ஆயில் காப்பரேசன் மூலம் கேஸ் பைப்லைன் அமைக்கும் பணியினை ஒருவார காலத்திற்குள் முடிக்கவும், தார் சாலை பணிகளை தரமானதாக அமைத்து வெகு விரைவில் பொதுமக்கள் பயன்பாடிற்கு கொண்டுவரவும் சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் துணை மேயர் வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி கமிஷனர் மாரிச்செல்வி, பணிகள் குழுத்தலைவர் சாந்தி முருகன், உதவி கமிஷனர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் ரமேஷ் கவுன்சிலர் ராஜேஸ்வரி மேகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க