• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் கலெக்டர் தகவல்

June 8, 2022

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சுய தொழில் நடத்த ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் வருகிற 14ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சுயதொழில் மற்றும் கடனுதவி திட்டங்கள் பற்றி விளக்க உள்ளார்கள். சுய வேலைவாய்ப்பு மூலம் தொழில் செய்ய விரும்பும் கோவை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க