• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலிதீன் கவர்கள் ஒழிப்பு என்ற பெயரில் சிறு வணிகர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம்

May 31, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட சுதேசி வணிகர்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

வணிகர் சங்கத் தலைவர் மணிகண்டன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கோவை மாவட்டத்தில் பாலிதீன் அவர்கள் ஒழிப்பு என்ற பெயரில் அரசு அலுவலர்கள் சோதனை நடத்துவதில் சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முதலில் பாலீத்தீன் கவர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

மேலும் பாலிதீன் பொருட்களை மாநில எல்லைகளிலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாலிதீன் உற்பத்தியை தடுக்க வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க