• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 வயது குழந்தைக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ்!

May 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில்,முதல் முறையாக ஒரு குழந்தைக்கு ஜாதி,மதம் இல்லை சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை கே.கே.புதுாரை சேர்ந்த நரேஷ் கார்த்திக், 33, தனது மூன்றரை வயது மகளை எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடினார்.விண்ணப்பத்தில், ஜாதி, மதம் குறிப்பிடவில்லை. இதனால், பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை.இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு, ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை பெற முயன்றார். வருவாய் துறை முதல் முறையாக இந்த சான்றிதழ் வழங்கியுள்ளது.

நரேஷ் கார்த்திக் கூறியதாவது:

பெற்றோர் தங்களது குழந்தைகளின் ஜாதி, மதம் குறித்து குறிப்பிடத் தேவையில்லை என, 1973ம் ஆண்டு தமிழக அரசு,அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம். வருவாய் துறையினரை சந்தித்து பேசியபோது அவர்களுக்கும் இதுகுறித்து தெரியவில்லை. கோவை கலெக்டரை தொடர்பு கொண்டபோது அவர் வடக்கு தாசில்தாரை தொடர்புகொள்ள அறிவுறுத்தினார்.

அதன் பின்னரே குழந்தைக்கு, சான்றிதழ் கிடைத்தது.எனது குழந்தைக்கு வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. ஜாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன் என, உறுதி அளித்துள்ளேன்.புதிய நடைமுறை என்பதால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனிவரும் குழந்தைகளுக்கு சான்றிதழ் எளிதில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க