• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய பா.ஜ.க. நிர்வாகி

May 27, 2022 தண்டோரா குழு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள ஏ பி முருகானந்தம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அக்கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகி வி எம் ராஜன் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கான பட்டங்களும் வழங்கப்பட்டன இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று பிறந்த நாள்கொண்டாடும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தேசிய துணை தலைவராக பதவி வகித்து பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றி பா.ஜ.க வின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். பா.ஜ.க வின் உண்மை தொண்டராகவும் சிறந்த தலைவராக விளங்குகிறார்.

மேலும் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளதாகவும், குழந்தைக்கு தேவையான பொருள்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் முரளி, உக்கடம் ஜோதி, சார்லஸ் சிங், சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க