• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலாவுடன் சண்டையா ?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

May 26, 2022 தண்டோரா குழு

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.சூர்யாவின் 41 ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் பாலா இப்படத்தில் மீண்டும் இணைவதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்யாகுமரியில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் சூர்யா சென்னைக்கு திரும்பினார். இதற்கிடையில், சூர்யா மற்றும் பாலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுபுள்ளியும் வைத்துள்ளார்.

மேலும், சூர்யா இப்படத்தில் காது கேளாத மீனவராக நடிக்கிறாராம்.மேலும் சூர்யா அப்பா மற்றும் மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

மேலும் படிக்க